(எம்.மனோசித்ரா)

சுதந்திர கட்சியை பாதுகாப்பதற்காகவே சில சந்தர்ப்பங்களில் பொதுஜன பெரமுனவை விமர்சிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது எனத் தெரிவித்த சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, அவ்வாறு விமர்சித்தாலும் பொதுஜன பெரமுனவுடன் இணைய வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்ததாகவும் தெரிவித்தார்.

சுதந்திர கட்சியின் - பொதுஜன பெரமுன புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்திடும் நிகழ்வு இன்று கொழும்பிலுள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய தயாசிறி,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இந்நாட்டில் சகல துறைகளிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திய ஒரு கட்சியாகும். பல வருடங்கள் பலமாக இருந்த கட்சிக்குள் சில முரண்பாடுகள் ஏற்பட்டதன் காரணமாக பிளவுகள் ஏற்பட்டன.

 அவ்வாறிருப்பினும் நாம் எந்த சந்தர்ப்பத்திலும் நாட்டை காட்டிக்கொடுக்கவில்லை. சுதந்தி கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுகள் குடும்பமொன்றில் காணப்படும் சிறு கோபங்களால் ஏற்படும் பிரிவைப் போன்றதாகும். எனினும் தேசிய பலத்தின் சக்தி எம்மை மீண்டும் ஒன்றிணைத்துள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.