விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் கொடுப்பதற்கும் மலேசியாவிற்கான இலங்கை தூதரகத்தை தாக்குவதற்கும் திட்டமிட்டவர்களை கைதுசெய்துள்ளதாக மலேசியாவின்; பயங்கரவாத தடுப்பு பிரிவின் தலைவர் அயோப் கான் மைடின் பிட்சை தெரிவித்துள்ளார்.

மலேசிய பிரஜைகளே  இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதை தொடர்ந்தே  விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு புத்துயுர் கொடுப்பதற்கான முயற்சிகள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளை தொடர்ந்து ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் முதல்  இவர்களை கண்காணித்து வந்ததாக  அயோப் கான் மைடின் பிட்சை தெரிவித்துள்ளார் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகளிற்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்,குணசேகரன் என்பவர் விடுதலைப்புலிகளை நினைவுகூறும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்,மற்றொருவர் அந்த அமைப்பிற்கு ஆதரவான பிரசுரங்களை விநியோகித்தார் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஆதரவான உரையாற்றிய குற்றத்திற்காகவும் ஒருவரை கைதுசெய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர மலேசிய தலைநகரில் விடுதலைப்புலிகளிற்கு ஆதரவளிக்கும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்த நபரையும், கைதுசெய்துள்ளதாகவும் அயோப் கான் மைடின் பிட்சை தெரிவித்துள்ளார்.

இதேவேளை மலேசிய தலைநகரில் உள்ள இலங்கை தூதரகத்தின் மீது தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில்  காப்புறுதி முகவர் ஒருவரையும் கைதுசெய்துள்ளதாக அயோப் கான் மைடின் பிட்சை தெரிவித்துள்ளார்.

மலேசியாவிற்கு வெளியே உள்ள சக்திகள் எங்கள் நாட்டில் விடுதலைப்புலிகளிற்கு புத்துயுர் அளிக்க முற்படுகின்றன என தெரிவித்துள்ள அயோப் கான் மைடின் பிட்சைஇதனை தடுத்து நிறுத்துவதற்காகவே நாங்கள் இவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யபட்டவர்களில் இருவர் டீஏபி கட்சியின் உறுப்பினர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.