எல்பிடிய தேர்தல் ஐ.தே.க விற்கு பலப்பரீட்சை பொதுஜன பெரமுன அமோக வெற்றிப்பெறும் : ரமேஷ் பத்திரன 

Published By: R. Kalaichelvan

10 Oct, 2019 | 04:53 PM
image

(இராஜதுரை ஹஷான்)

எல்பிடிய பிரதேச சபை தேர்தலில்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப் பெற்று அதிகமான ஆசனங்களை கைப்பற்றும். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கு முன்னர் தமது பலத்தை ஐக்கிய தேசிய கட்சி இத்தேர்தலில் உறுதிப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பத்திரன சவால்விடுத்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 ஸ்ரீ லங்க பொதுஜன பெரமுனவுன், சுதந்திர கட்சி ஒப்பந்த அடிப்படையில் இணைந்துள்ளமை எமது வெற்றியை பலப்படுத்தியுள்ளது. 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு சுமார் 52 இலட்சம் வாக்குகள் உள்ளது என்று  இடம் பெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பெறுபேற்றின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அத்தேர்ததில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு 15 இலட்சம் வாக்குகள் காணப்படுகின்றது. ஆகவே தற்போது இவ்விரண்டு தரப்பின் இணைப்பின் ஊடாக சுமார் 67 இலட்சம் வாக்குகள் எதிரணிக்கு உள்ளது என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 67இலட்சம் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டே  பொதுஜன பெரமுன  ஜனாதிபதி தேர்தலை எதிர்க்கொள்ளவுள்ளது. தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கான அனைத்து திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளது. சுதந்திர கட்சியின் கொள்கையினையும் ஆதாரமாக கொண்டு ஜனாதிபதி தேர்தலில்  அமோக பெற்றிப் பெற முடியும் என இதன்போது தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04
news-image

தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது...

2024-04-16 10:14:41
news-image

இன்று பல அலுவலக ரயில் சேவைகள்...

2024-04-16 10:07:27
news-image

மரதன் ஓட்டப் போட்டியில் மகனுக்கு ஆதரவளிக்கச்...

2024-04-16 10:26:53
news-image

ஈரான் ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்

2024-04-16 10:39:31
news-image

3 நாட்களில் 167 வீதி விபத்துக்கள்;...

2024-04-16 10:28:57
news-image

பிணைமுறி பத்திர உரிமையாளர்கள் குழுவுடன் இறுதிக்கட்ட...

2024-04-16 09:31:45
news-image

தமிழ் பொதுவேட்பாளர் தொடர்பில் மீண்டும் பேச்சு...

2024-04-15 16:25:40