தலையில் வழுக்கைவிழுதல் பரம்பரையாக மாரபணு மூலம் கடத்தப்படும் ஒரு இயல்பாக இனங்காணப்பட்டப் போதிலும் இளம் வயது முதல்  ஆண் பெண் என இருபாலாரையும் சிரமத்துக்குள்ளாக்கும் நிலைக்கு இன்னும் சில புதிய காரணிகள் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. சூழல் மாசடைவதால்  இயற்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு உலகில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் வளி மாசு அடைதல் மனிதனுக்கு நேரடியாக சுகாதாரப்பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. 

இந்நிலையில் அந்த நச்சு துணிக்­கைகள் சருமத்தில் ஊடுருவி கேச இழப்­பிற்கும் கார­ண­மா­வ­தை கொரிய குடி­ய­ரசின் ஹயுக் சுல் கவொன் என்ற விஞ்ஞானி தலைமையிலான குழு தமது ஆய்வின் மூலம்  சான்­றுகளுடன் முன்வைத்துள்ளது. 

வளி மாசடைவதனால் ஏற்படும் ஒரு பிரச்சினையாக தலையில் வழுக்கை ஏற்படுகின்றதாக விஞ்ஞானிகள் தமது ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.  

மாசடைந்த வளியில் காணப்படும் சிறிய நச்சுத் துணிக்­கைகள் தலையில் காணப்படும் கலங்­க­ளுக்குள் ஊடுருவி கேச வளர்ச்­சிக்குத் தேவை­யான முக்­கி­ய­மான புர­தங்­களின் மட்­டத்தை குறைத்து  கேச வளர்ச்­சியை ஊக்­கு­விக்கும் இர­சா­யன செயற்­கிரமங்­களை பாதிப்படைய செய்கின்றது. 

இதன் காரணமாக தலையில் முடிவளர்ச்சி குறைந்து வழுக்கை ஏற்­படுவதாக புதிய ஆய்வு முடிவு கூறுகின்றது. 

மனிதனின்  உச்சந்தலையின் மயிர்க்கால்களிலுள்ள கலங்களை ”வெஸ்டர்ன் ப்ளாட்டிங்“ எனப்படும் அறிவியல் நுட்பத்தைப் பயன்படுத்தில் ஆய்வுக்குட்படுத்தியதன் மூலமே  விஞ்ஞானிகள் இவ் உண்மையை கண்டறிந்துள்ளனர். 

தொழிச்சாலைகள், வாகனங்கள் மற்றும் வீட்­டுகள் என்பவற்றிலிருந்து வெளியாகும் வளி மாக்கிகள் வெளிப்­படும்  நச்சுத் துணிக்­கைகள் ஆஸ்­மா, இரு­தய மற்றும் நுரை­யீரல் நோய்­க­ளுக்கு கார­ண­மான காரணிகளாக இதுவரை அறி­யப்­பட்­டுள்ளது. தலையில் வழுக்கை ஏற்­பட மாசடைந்த வளி ஒரு காரணமாக கண்­ட­றி­யப்­ப­டு­வது இதுவே முதல் தட­வை­ என்பது குறிப்பிடத்தக்கது. 

இது போன்ற பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமெனில் உலகம் வளிமாசடைவை தடுக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுதல் அவசியமாகின்றது. குறிப்பாக போக்குவரத்து போன்றவற்றிற்கு மாற்று வழியை பயன்படுத்தவேண்டும்.