(செ.தேன்மொழி)

வாத்துவை பகுதியில் தங்கச் சங்கிலி கொள்ளையிட்டமை தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாத்துவை பகுதியில்  நேற்று புதன்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

பமுணுகம , அளுபோமுள்ள மற்றும் பண்டாரகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 34 - 39 வயதுக்கு இடைப்பட்ட நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  குறித்த நபர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்களும், கொள்ளையிடப்பட்ட தங்கச் சங்கிலிகளும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் வாத்துவை மற்றும் மொரந்துட்டுவ ஆகிய பகுதிகளில் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் பெருமளவான தங்கச் சங்கிலி தொடர்பான கொள்ளைச் சம்பவங்களில் தொடர்பு கொண்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாத்துவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.