(செ.தேன்மொழி)

காவத்தை - ஓபநாயக்க பகுதியில் மின்னல் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

ஓபநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடியாவத்த - அக்கரெல்ல பகுதியில் புதன்கிழமை நபரொருவர் மின்னல் தாக்குதலுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பத்தின் போது வயல்வெளியில் இருந்துள்ள நபர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி கவலைக்கிடமான நிலையில் காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஓபநாயக்க -அக்கரெல்ல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய துணுகுமாரகே எதிகே ஹெரில் குணரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.