மக்கள் சுதந்திரமான ஒரு ஆட்சியை அனுபவிக்க வேண்டுமென்றால்  சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்கினால் மட்டுமே சாத்தியம் என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹுமான் 2015ம் ஆண்டு ஐ.தே.க ஆரம்பித்த பயணத்தை எதற்காகவும் நிறுத்த போவதில்லை என்று குறிபிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் நிகழ்வு நேற்று பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தலைமையில் அழுத்கடை பிரதேசத்தில் நடைபெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை குறிப்பிட்டார்.

கடந்த சில தினங்களாக ஐ.தே க கட்சிக்குள் நிலவிய கருத்து வேறுபாடுகள் காரணமாக கட்சி நான்காக பிளவுபடும் என்று சிலர் நினைத்திருந்தனர் ஆனால் இன்று அத்தனை தடைகளையும்  உடைத்தெறிந்து சஜித்- கரு-ரணில் என்ற மாபெரும் கூட்டணியை உருவாக்கி உள்ளோம்.

இதுதான் எங்களின் சக்தி ஐ .தே.கவின் பலம் என்று அனைவருக்கும் நிரூபித்துள்ளோம்.

2015 ம் ஆண்டு மிகவும் கஷ்டத்தின் மத்தியில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி ஆக்கினோம். தற்போதும் ஜனதிபதி தேர்தல் தொடர்பான முடிவுகளை நாங்கள் எடுத்துள்ளோம். 

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற செய்து நாட்டில் மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நாட்டை உருவாக்குவோம் என்றும் இதன் போது  குறிப்பிட்டார்.