கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞன் ரயிலிலிருந்து விழுந்து  படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று (10)  அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு படுகாயமடைந்தவர் திருகோணமலை-இறக்கக்கண்டி பகுதியைச் சேர்ந்த முகம்மது முபீஸ் (21வயது) எனவும் தெரியவருகின்றது. 

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றிக் கொண்டிருந்த இவர் இன்று தனது 21 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்காக அவரது சகோதரர்கள் அவரை வீட்டுக்கு வருமாறு அழைத்த போது அவர் நேற்றிரவு கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு சென்றதாகவும் இன்று அதிகாலை ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. 

குறித்த இளைஞர்  தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.