சர்வதேச உலநல தினத்தை முன்னிட்டு வவுனியா பொது வைத்தியசாலை உளநலப் பிரிவும் மாவட்டச் செயலகமும் இணைந்து இன்று உளநல தின நிகழ்வு வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள் அனைவருக்கும் உலநலத்தை பேணும் முகமாக வாழும் கலைப் பயிற்சியின் பேராசிரியர் மனநலக்கலை நிபுணர் க.கமேலேந்திரன் விசேட பயிற்சிகளை வழங்கியிருந்தார். 

அதேபோன்று தற்கொலையைத் தடுக்கும் விழிப்புணர்வு கருத்தாடல், மதுபாவனை தொடர்பான விழிப்புணர்வு கருத்தாடல், எனப் பல விழிப்புணர்வு தெளிவுபடுத்தல் நிகழ்வுகளும் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா மாவட்டச் அரசாங்க அதிபர் ஐ.எம் கனீபா, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் , யூ.எஸ்.அட் நிறுவனத்தின் இலங்கைக்கான முக்கியஸ்தர் கார்த்திகேயன், வவுனியா மாவட்ட வைத்திய நிபுணர்கள், வவுனியா உள வைத்திய கலாநிதி பிராத் பிராந்திய சுகாதார வைத்தியப் பணிப்பாளர் ப.பசுபதிராஜா, உள சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி எஸ் சுதாகரன், மாவட்டச் செயலக உத்தியோகஸ்தர்கள், பாடசாலை மாணவர்கள், வைத்திய தாதியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மனதோடு பேசவோ எனும் புத்தகமும் வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.