உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிர்ச்சி அறிக்கை

உலகில் 2.2 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான மக்கள் பார்வைக் குறை­பாடு அல்­லது குருட்டுத் தன்­மை­யுடன் வாழ்­வ­தாக  உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் பார்வை தொடர்­பான உலக அறிக்கை தெரி­விக்­கி­றது.

கண் பார்வை குறித்து இத்­த­கைய அறிக்­கை­யொன்று வெளியி­டப்­ப­டு­வது இதுவே முதல் தட­வை­யாகும். கண்­புரை நோய்க்­கான அறுவைச் சிகிச்சை மூலம் ஒரே  இரவில் தமது பார்­வையை  சீர்­செய்யக்கூடிய வாய்ப்­பி­ருந்தும் உலகில் சுமார் 65 மில்­லியன் மக்கள் பார்வைக் குறை­பாடு மற்றும் குருட்­டுத்­தன்­மை­யுடன் வாழ்­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என  உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் பணிப்­பாளர் நாயகம் ரெட்ரொஸ் அடனொம் கிபி­றி­யெஸஸ்  தன்னால் வெளியி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் தெரி­வித்­துள்ளார்.

கண் பார்வை தொடர்­பான மருத்­துவக் கவ­னிப்புத் தேவை­யா­ன­வர்கள் நிதி தொடர்­பான கஷ்­டங்­க­ளுக்கு உள்­ளா­கா­த­வாறு தர­மான சிகிச்­சையைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டிய தேவை­யுள்­ளது. அந்த வகையில் அனைத்து நாடு­களும்  தேசிய சுகா­தார கவ­னிப்புத் திட்­டத்தின் ஒரு அங்­க­மாக கண் பார்வை தொடர்­பான கவ­னிப்பை  உள்­ள­டக்­கு­வது அவ­சி­ய­மா­க­வுள்­ளது என ரெட்ரொஸ் தெரி­வித்தார்.

 உல­க­ளா­விய ரீதியில் பெருமளவு மக்கள்  கண்­ணுக்குள் ஒளியின் வில­கலை சீர்­செய்யத் தவ­றுதல், கண்­புரை நோய் மற்றும் குறும்­பார்வை, நீரி­ழிவு, பார்வைக் குறை­பாட்டை தாம­த­மாக கண்­ட­றிதல்  உள்­ள­டங்­க­லான ஏனைய கார­ணங்­களால் பார்வைக் குறை­பா­டுடன் வாழும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.  

கண்­ணுக்குள்  ஒளியின் வில­கலை சீர்­செய்யத் தவ­றி­ய­மையால் 124 மில்­லியன் பேரும் கண்­புரை நோயால் 65 மில்­லியன் பேரும் பார்வைக் குறை­பாட்­டுடன் வாழ்­கின்­றனர். அத்­துடன் சுமார் 900 மில்­லியன் பேர் வய­தா­த­லுடன் தொடர்­பு­பட்ட வெள்ளெழுத்து  பாதிப்பு மற்றும் கண் அழுத்த நோய் (குளுக்­கோமா) பாதிக்­கப்­பட்ட நிலையில் சிகி ச்சை பெறாது  வாழ்­கின்­றனர்.

கண் பார்வைக் குறை­பாடு உல­க­ளா­ விய ரீதியில் சம­மான முறையில் பாதி ப்பை ஏற்­ப­டுத்­த­வில்லை எனவும் அது குறைந்த மற்றும் நடுத்­தர வருமானம் உழைக்கும் நாடுகள், பெண்கள், குடி­யே ற்­ற­வா­சிகள், பூர்­வீக குடிகள், குறிப்­பிட்ட உடல் குறை­பா­டு­களைக் கொண்­ட­வர்கள் மற்றும் கிராமப் பிராந்­தி­யங்­களைச் சேர்ந்த மக்­களைப் பெரிதும் பாதிப்­ப­தாக உள்­ளது எனவும் உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் மேற்­படி  அறிக்கை கூறு­கி­றது.

அதிக வரு­மானம் பெறும் பிராந்­தி­யங்­க­ளுடன் ஒப்­பி­டு­கையில் கிழக்கு மற்றும் மேற்கு ஆபி­ரிக்க சஹாரா,  தெற்கு ஆசிய பிராந்­தி­யங்­களை பார்வைக் குறை­பாடு 8 மடங்கு அதி­க­மாக பாதித்­துள்­ள­தாக இந்த அறிக்கை மேலும் தெரி­விக்­கி­றது.