ஹப்புத்தளை தம்பேதன்னை பகுதியில் முன்னூறுக்கும் மேற்பட்ட எஸ்.வி.எஸ். போதை குப்பிகளை ஹப்புத்தளை பொலிசார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது மீட்டனர்.

ஹப்புத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இன்று மேற்படி சுற்றிவளைப்பு சோதனைகளை மேற்கொண்டிருந்தனர். 

பொலிசாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்தே மேற்படி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து ஹப்புத்தளைப் பொலிசார் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்டவர் விசாரணையின் பின்னர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.