மஸ்கெலியா நகரில் உள்ள உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பேக்கரிகளை தரப்படுத்தல் செய்வதற்காக மஸ்கெலியா பிரதேச சபை மற்றும் பொது சுகாதார காரியாலயம் இணைந்து நகரில் இரு வேறு இடங்களில் பதாதைகள் இரண்டினை காட்சி படுத்தியுள்ளனர்.

இப்பதாதைகளில் ஒன்று அட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் சிங்கள மொழியில் மாத்திரம் காணப்படுவதுடன் சாமிமலை மஸ்கெலியா பிரதான பாதையில் தமிழ் மொழியில் மாத்திரம் காணப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும்,இப்பதாதைகளில் மும்மொழிகளிலும் காணப்பட்டால் அனைத்து மக்களுக்கும் இலகுவாக இருப்பதுடன் மக்கள் தரப்படுத்தல் செய்வதற்கு இலகுவாக இருக்கும் என குறிப்பிடுகின்றனர்.

ஆகையால் உடன் உரிய அதிகாரிகள் முன்வந்து இப்பதாகைகளை உரிய முறையில் திருத்தி அமைக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.