சவுதி அரேபியாவில் பெண்கள் ஆயுதப் படையில் சேர அந் நாட்டு அரசங்கம் அனுமதி அளித்துள்ளது. 

முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. முகம், உடல் தெரியாத அளவுக்கு ஆடைகள் அணிதல், கார் ஓட்டத் தடை, விளையாட்டுப் போட்டிகளை நேரடியாகப் பார்க்கத் தடை, சினிமா பார்க்கத் தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் பெண்களுக்கு இருந்தன.

இந்த நிலையில்  சவுதி அரேபியின் இளவரசர் வந்த முகம்மது பின் சல்மான் பல்வேறு புதிய சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு  வருகின்றன.  

பெண்கள் கார் ஓட்டுவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெற்றுக்கொள்ளவும் பெண்கள் திரையரங்குகளில் சென்று சினிமா பார்க்கவும் சவுதி அனுமதி அளித்தது.

இந் நிலையில் பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களின் பரந்த வேலைத்திட்டத்தை சவுதி அரசாங்கம் மேற்கொள்வதால், இராஜ்ஜியத்தில் உள்ள பெண்கள் ஆயுதப்படைகளில் பணியாற்ற அரேபியா கடந்த புதன்கிழமை அனுமதியளித்தது.