சட்டவிரோத துப்பாக்கிகள் நான்குடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீரிகம - லொலுவாகொட பிரதேசத்தில் வைத்தே குறித்த சந்தேக நபர்  கம்பஹா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்தோடு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 1 துப்பாக்கி என்பன சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்த நபரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.