(நா.தனுஜா)

ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு ஆத­ரவு திரட்டி இன்று கொழும்பு காலி­மு­கத்­தி­டலில் முத­லா­வது பிர­சாரக் கூட்டம் நடை­பெ­ற­வுள்­ளது.  

ஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான வேட்­பு­மனுக் கள் திங்­கட்­கி­ழமை தாக்கல் செய்­யப்­பட்ட நிலையில், தேர்­தலில் போட்­டி­யிடும் அனைத் துத் தரப்­புக்­களும் தமது தேர்தல் பிர­சார நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்தி­ருக்­கின்­றன. ஸ்ரீலங்கா பொது­ஜன பெரமு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் களமி­றங்கி­யி­ருக்கும் கோத்­த­பாய ராஜ­பக்  ஷ நேற்று தனது தேர்தல் பிர­சா­ரத்தை அநு­ரா­த­பு­ரத்தில் ஆரம்­பித்­தி­ருந் தார்.

அவ்­வா­றி­ருக்க ஐக்­கிய தேசியக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­ன­ணி யின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு அவ­ரது ஆத­ர­வா­ளர்கள் மற்றும் பொது­மக்­களின் நம்­பிக்­கை­யையும், ஆத­ர­வையும் வெளிப்­ப­டுத்தும் வகையில் இன்று கொழும்பு காலிமுகத்திடலில் பிற்பகல் 2 மணிக்கு மாபெரும் மக்கள் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.