ஐக்கிய நாடுகள் சபையின் பரிதாப நிலை

Published By: Digital Desk 3

10 Oct, 2019 | 11:35 AM
image

ஐக்­கிய நாடுகள் சபையின் அங்­கத்­துவ நாடுகள் தமது கடன்­களை செலுத்தத் தவ­றினால் அந்த சபைக்கு எதிர்­வரும் மாதத்தில் தனது உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான ஊதி­யங்­களை வழங்கப்போது­மான பணம் இல்­லாது போய்­விடும் நிலை தோன்­றி­யுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் அந்­தோ­னியோ குட்­டரெஸ்  நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை எச்­ச­ரித்­துள்ளார்.

ஐக்­கிய நாடுகள் சபை நிதி தொடர்பில் திண்­டாட்­டத்தில் உள்­ள­தாக தக­வல்கள் வெளியா­கி­யுள்ள நிலை­யி­லேயே ஐக்­கிய  நாடுகள் செய­லாளர் நாய­கத்தின் இந்த எச்­ச­ரிக்கை வெளியா­கி­யுள்­ளது.

அவர் செவ்­வாய்க்­கி­ழமை 193 அங்கத்­ துவ நாடு­களைக்கொண்ட ஐக்­கிய நாடுகள் பொதுச்சபையின் வர­வு­–செ­லவுத் திட்ட சபை முன்­பாக இந்த உரையை ஆற்­றி­யி­ருந்தார். தான் கடந்த ஜன­வரி மாதத்­தி­லி­ருந்து செல­வி­னத்தைக் குறைக்க நட­வ­­டிக்கை எடுத்­தி­ரா­விடில் கடந்த மாதம் இடம்­பெற்ற வரு­டாந்த  உலகத் தலை­வர்­களின் கூட்­டத்­திற்குத் தேவை­யான  நிதி­யில்­லாது போயி­ருக்கும் என அவர் கூறினார்.

இந்த மாதம் கடந்த ஒரு தசாப்த காலத்தில் ஒரு­போதும் எதிர்­கொள்­ளாத வகை­யி­லான நிதிப்பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளது. அதனால் போதிய பண­மின்றி நவம்பர் மாதத்தில் கால­டி­யெ­டுத்து வைக்கும் அபா­யத்தை நாம் எதிர்­கொண்­டுள்ளோம். இதனால் எமது பணி­களும் எமது சீர்­தி­ருத்­தங்­களும் இடர்­பாட்­டி­லுள்­ளன என அவர் தெரி­வித்தார்.  

இந்த ஆண்­டுக்­கான 3.3 பில்­லியன் டொல­ருக்கும் அதி­க­மான  வழ­மை­யான வர­வு­செ­லவுத் திட்­டத்தில் 22 சத­வீதத்­திற்கு பங்­க­ளிப்பு செய்­வ­தற்கு அமெ­ரிக்கா பொறுப்­பா­க­வுள்­ளது.

அந்த நிதி அர­சியல், மனி­தா­பி­மான, பொரு­ளா­தார, சமூக மற்றும் தொடர்­பாடல்  உள்­ள­டங்­க­லான பணி­க­ளுக்­காக செலுத்­தப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் அமெ­ரிக்கா இதற்கு முந்­திய வழ­மை­யான வர­வு­ செ­லவுத் திட்­டங்­க­ளுக்­காக சுமார் 381 மில்­லியன் டொல­ரையும் இந்த ஆண்­டுக்­கான  வழ­மை­யான வர­வு­ செ­லவுத் திட்­டத்­திற்­காக 674 மில்­லி­ய­னையும் கடன்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் மேற்­படி கடன் தொகைகள் குறித்து  ஐக்­கிய நாடு­க­ளுக்­கான அமெ­ரிக்கத் தூத­ரகம் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்தபோதும்  அந்தக் கடன்கள் எப்­போது  செலுத்­தப்படும் என்­பது தொடர்பில் விமர்­சனம் எத­னையும் வெளியி­ட­வில்லை. அமெ­ரிக்கா ஐக்­கிய நாடுகள் சபையின்  சீர்­தி­ருத்­தங்­களை முன்­னெ­டுக்க அத­னது நீதி­யற்ற செல­வின சுமை க்கு தோள்­கொ­டுத்து வரு­வ­தாக  அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் ஏற்­க­னவே குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்தார்.

இந்­நி­லையில் குட்­டரெஸ் ஐக்­கிய நாடு கள் சபையின் செயற்­பா­டு­களை மேம்படுத்­ தவும் செல­வி­னத்தைக் குறைக்­கவும் போராடி வரு­கிறார். நிதிப்பற்­றாக்­குறை கார­ண­மாக வெற்­றி­ட­மான பத­விகள் நிரப்­பப்­ப­டா­துள்ள அதே­ச­மயம் அத்­தி­யா­வ­சி­ய­மான போக்­கு­வ­ரத்­து­களை மேற்­கொள்ள மட்­டுமே அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன்  சபையின் சில கூட்­டங்கள் இரத்துச் செய்­யப்­பட்­டுள் ­ளன.

இந்த நிதிப் பற்­றாக்­கு­றையால் நியூயோர்க், ஜெனிவா, வியன்னா மற்றும் நைரோ­பி­யிலும் ஏனைய பிரா­ந்தியங்­க­ளி­லு­மான  ஐக்­கிய நாடுகள் சபையின் செயற்­பா­டுகள் பாதி ப்பை எதிர்­கொண்­டுள்­ளன.

எனினும் ஐக்­கிய நாடுகள் சமா­தானப் படை­யி­னரின் செயற்­கி­ர­மத்­திற்கு வேறான வரவு செலவுத் திட்­ட­மொன்றின் மூலம் நிதி­வ­ச­தி­ய­ளிக்­கப்­பட்டு வரு­கி­றது. அமெரி க்கா சமாதானப் படையினரின் செயற்கிர மத்துக்காக தற்போது  சுமார் 2.4 பில்லியன் டொலர் பெறுமதியான தொகையை கடன் பட்டுள்ளது.

அதேசமயம் எதியோப்பியா, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் ருவண்டா ஆகிய நாடுகள்  சமாதானப் படையில் அங் கம் வகிக்கும் தமது படையினருக்கு தமது தேசிய சம்பள மட்டத்திற்கு அமைவாக ஊதியத்தை வழங்கி வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47