அமெ­ரிக்க வெள்ளை மாளி­கை­யா­னது ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்­பி ற்கு எதி­ரான கண்­டனத் தீர்­மான விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைப்பை வழங்­கு­வ­தற்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக மறுப்புத் தெரி­வித்­துள்­ளது.

ஜன­நா­யகக் கட்­சி­யி­னரால் மேற்­படி விசா­ர­ணையை முன்­னெ­டுப் ­பது குறித்து அனுப்­பப்­பட்ட  கடி­த­மொன்று எது­வித அடிப்­ப­டை­யு­மற்­றது என்­ப­துடன் அரசிய­ல­மைப்பு ரீதியில் வலி­தற்­றது என  வெள்ளை மாளிகை குறிப்­பிட்­டுள்­ளது.

3 ஜன­நா­யகக் கட்­சி­யினர் தலை­மை­யி­லான பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள் சபைகள் டொனால்ட் ட்ரம்ப் மீதான விசார­ணையை முன்­னெ­டுத்­துள்­ளன. எதிர்­வரும் 2020ஆம் ஆண்டு இடம்­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதி தேர்­தலில் ஜன­நா­யகக் கட்­சியின்  வேட்­பா­ள­ராக போட்­டி­யிட எதிர்­பார்த்­துள்ள  ஜோ பிடெ­னுக்கு எதி­ரான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க உக்­ரே­னுக்கு டொனால்ட் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்­தாரா என்­பது குறித்து  கண்­ட­றியும் முக­மாக மேற்­படி விசா­ரணை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

பாரா­ளு­மன்ற கண்­டனத் தீர்­மான விசா­ர­ணை­யொன்றில் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துக்­கான அமெ­ரிக்கத் தூதுவர் ஆஜ­ரா­வ­தற்கு டொனால்ட் ட்ரம்பின் அர­சாங்கம் முட்­டுக்­கட்டை போட்டு சில மணி நேரத் ­தி­லேயே அந்த விசா­ரணை தொடர்பான வெள்ளை மாளி­கையின் மறுப்பு வெளியா­கி­யுள்­ளது. வெள்ளை மாளிகை சட்ட ஆலோ­சகர் பட் சிப்­பொல்­லோனால் ஜன­நா­யகக் கட்­சியைச் சேர்ந்த  பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள் சபை சபா­நா­யகர் நான்ஸி பெலோ­ஸிக்கும்  அந்த சபை­யி­லுள்ள  ஜன­நா­யக கட்சி சபை­களைச் சேர்ந்த 3 தலை­வர்­க­ளுக்கும் எழு­தப்­பட்ட 8 பக்கக் கடி­தத்தில், ஜன­நா­யகக் கட்­சியைச் சேர்ந்த தலை­வர்கள்  நீதி­யையும்  அர­சி­ய­ல­மை­ப் ­பையும் மீறும் வகை­யி­லான விசா­ர­ணை­யொன்றை முன்­னெ­டுத்­துள்­ள­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

2016ஆம் ஆண்டு தேர்தல் பெறு­பே ற்றை மாற்­று­வ­தற்கு ஜன­நா­யகக் கட்­சி­யினர் முயற்­சித்து வரு­வ­தாக அக்­கடி­தத் தில் தெரி­வித்­துள்ள வெள்ளை மாளிகை சட்ட ஆலோ­சகர், அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியும் அவ­ரது அர­சாங்­கமும்  அமெ­ரிக்க மக்­க­ளுக்­கான தமது கட­மை­களை பூர்த்­தி­செய்யும் முக­மாக   உங்­க­ளது பார­பட்­ச­மான அர­சி­ய­ல­மைப்­புக்கு முர­ணான விசா­ர­ணையில் பங்­கேற்க முடி­யா­துள்­ளது எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

இந்­நி­லையில் இந்தக் கடி­தத்­திற்கு நான்ஸி பெலோஸி கண்­டனம் தெரி­வித்­துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் சட்­ட­மின்­மையை சாதா­ர­ண­மாக்க முயற்­சிப்­ப­தாக  அவர் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார். ஜனா­தி­பதி சட்­டத்­திற்கு மேலா­னவர் அல்லர். அவர் பொறுப்புக் கூற வைக்­கப்­பட வேண்டும் என  அவர் தெரி­வித்தார்.