கடந்த 5 வரு­டங்­க­ளாக மலை­யக அபி­வி­ருத்­திக்கு 'தனி­யான அதி­கார சபை' தேவை என்று பரிந்­துரை செய்­யப்­பட்டு வந்­துள்­ளது. அதற்கு அமைய 'மலை­யக அபி­வி­ருத்தி அதி­கார சபை' தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் முயற்­சியால் அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரத்­துடன் கிடைத்­துள்­ளது. அதன் செயற்­பா­டுகள் எத்­த­கை­யது என்­பது பற்றி மக்கள் மத்­தியில் கொண்டு செல்­லப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என 'பிரிடோ' நிறு­வ­னத்தின் தலைவர் மைக்கல் ஆர் ஜோக்கிம் தெரி­வித்தார்.

பெருந்­தோட்ட சமூக மாமன்­றத்தின் பணி­களை மீளவும் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டி­யதன் அவ­சி­யத்தை வலி­யு­றுத்தும் கலந்­து­ரை­யாடல் கூட்டம் ஒன்று அட்டன் 'டைன் என் ரெஸ்ட்' விருந்­த­கத்தில் கடந்த சனிக்­கி­ழமை இடம்­பெற்­றது. பிரிடோ நிறு­வ­னத்தின் திட்­ட­மிடல் பணிப்­பாளர் எஸ்.கே. சந்­தி­ர­சே­கரன் தலை­மையில் இடம்­பெற்ற மேற்­படி கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். தொழிற்­சங்­கங்கள், அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள், பொது அமைப்­புகள் முத­லா­ன­வற்றை பிர­தி­நி­தித்­துவப்படுத்தி சுமார் 100 பேர் கலந்து கொண்ட இந்­நி­கழ்வில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

எமது சமூகம் கொடுத்து வந்த அழுத்தம் கார­ண­மாக நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் பிர­தேச சபைகள் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. அதேபோல், பிர­தேச செய­ல­கங்­களும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இது எமக்குக் கிடைத்­துள்ள வெற்­றிதான் என்­றாலும்,  ஒரு வரு­டத்­துக்கு மேலா­கியும் இன்னும் அவற்­றுக்­கு­ரிய கட்­டி­டங்கள் கிடைக்­க­வில்லை. தேவை­யான உத்­தி­யோ­கத்­தர்­களும் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. அது தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்­தலும் இன்னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

பிர­தேச சபையின் சேவை­களை தோட்ட மக்கள் பெற்றுக்கொள்ள முடி­யாத வகை யில் அதன் சட்­டத்தில் சில சர­த்துகள்   அமைந்­துள்­ளன. பிர­தேச சபைகள் உரு­வாக்­கப்­பட்டு 30 வரு­டங்­க­ளுக்கு மேலா­கியும் தோட்ட மக்கள் அதன் பயன்­களைப் பெற்றுக்கொள்ள முடி­யா­துள்­ளது என்­பதை சுட்டிக்காட்டி பிர­தேச சபை சட்­டத்தில் திருத்தம் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. அதன் சேவை­களை இனிமேல் தோட்­டங்­க­ளுக்கு விஸ்­த­ரிக்­கலாம் என்று கூறப்­ப­டு­கின்ற போதிலும், அதில் நீக்­கப்­பட்ட விடயம், உள்­வாங்­கப்­பட்ட விடயம் என்ன என்­பது அங்கு கட­மை­யாற்றும் உத்­தி­யோ­க­த்தர்­க­ளுக்கு தெரி­யாமல் உள்­ளது. உத்­தி­யோ­கத்தர்­க­ளுக்கே தெரி­யாத நேரத்தில், சாதா­ரண மக்­க­ளுக்கு எவ்­வாறு தெரியும் என்று சிந்­தித்துப் பார்க்க வேண்டும். அதன் சேவையை எவ்­வாறு பெற்றுக் கொள்­வது என்­பது தொடர்­பான பயிற்­சிகள் மக்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்டும்.

அதேபோல், மலை­யக அபி­வி­ருத்­திக்­காக தனியான அதிகார சபை உருவாக்கப்பட்டுள்ளது. அரச வளத்தை எமது மக்களுக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றிய அறிவையும் தெளிவையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டியது அவசியமாகும். இதில் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு பெரும் பங்கு இருக் கின்றது என்றார்.