சிறையில்  தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த வேளையில் அதனை பொலிசார் கண்டு மேற்கொண்ட நடவடிக்கையினால் குறித்த நபர் காப்பாற்றப்பட்டார்.

இச்சம்பவம் மொனராகலை பொலிஸ் நிலைய சிறைச்சாலையில் இன்று இடம்பெற்றுள்ளது.

வீடுடைப்பு, களவு போன்ற குற்றச்சாட்டுக்களில், கைது செய்யப்பட்ட குறித்த நபர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தும் வரை பொலிஸ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இவ்வேளையில் மலசலக்கூடம் செல்ல வேண்டுமெனக் கூறி சென்ற அந்நபர் தனது மேற்சட்டையை எடுத்து கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இந்நிலையில் மலசலக்கூடம் சென்ற நபர் வெளியே வராதலால் பொலிசார் அங்குச் சென்ற போது குறிப்பிட்ட நபர் கழுத்தில் சுருக்கிட்டுத் தொங்குவதைக் கண்டனர்.

உடனடியாக பொலிசார் எடுத்த நடவடிக்கையின் பயனாகத் தூக்கில் தொங்கிய நபர் மீட்கப்பட்டு மொனராகலை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.