(நா.தனுஜா)

சிறு­பான்­மை­யின மக்கள் இம்­முறை தேர்­தலில் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கே வாக்­க­ளிப்­பார்கள் என்­பதை உணர்ந்­து­கொண்ட சிலர், அந்த வாக்கு வங்­கியை உடைப்­ப­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

அதன் ஓரங்­க­மாக சஜித்­துக்கு கிடைக்­கவுள்ள கிழக்கு மாகாண முஸ்­லிம்­களின் வாக்­கு­களைப் பிள­வு­ப­டுத்தும் நோக்கில் எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்­புல்லாஹ் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றக்­கப்­பட்­டி­ருக்­கிறார் என்று ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் தெரி­வித்தார்.

கொழும்­பி­லுள்ள ஐக்­கிய தேசியக் கட்­சியின் அலு­வ­ல­கத்தில் நேற்­றைய தினம் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது,

இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில் எமது வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவின் வெற்றி உறு­தி­செய்­யப்­பட்­டி­ருப்­ப­துடன், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனை­வரும் அவ­ருக்கே வாக்­க­ளிப்­பார்கள் என்­ப­தையும் பலர் உணர்ந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். எனவே அந்த வெற்­றியைக் குழப்பி, சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு கிடைக்­கக்­கூ­டிய சிறு­பான்­மை­யின மக்­களின் வாக்­கு­களைப் சிதரடிக்கப்பட்டு முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றார்கள்.

அதன் ஓரங்­க­மா­கவே கிழக்கு மாகாண ஆளு­ந­ராகப் பதவி வகித்த எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்­புல்லாஹ் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றக்­கப்­பட்­டி­ருக்­கிறார். இந்த நாட்டில் சிறு­பான்­மை­யி­னத்தைச் சேர்ந்த ஒருவர் ஜனா­தி­ப­தி­யா­வது சாத்­தி­ய­மற்­றது என்று நன்கு தெரிந்­தி­ருந்­தும்­கூட அவர் தேர்­தலில் போட்­டி­யி­டு­கிறார் என்றால் அதற்குக் காரணம், கிழக்கு மாகா­ணத்தில் சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு கிடைக்­கக்­கூ­டிய முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களை சிதரடிக்கும் நோக்­க­மே­யாகும்.

உயிர்த்த ஞாயி­று­தின குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளுக்குப் பின்னர் ரிஷாத் பதி­யுதீன் மற்றும் ஹிஸ்­புல்லாஹ் ஆகியோர் பெரும் சிக்­கலை எதிர்­கொண்டபோது, அமைச்­ச­ர­வையில் அங்கம் வகித்த அனைத்து முஸ்லிம் அமைச்­சர்­களும் தமது பத­வி­களைத் துறந்து அவர்­க­ளுக்கு ஆத­ர­வாக நின்­றார்கள். அவ்­வா­றி­ருக்­கையில் இப்­போது முஸ்லிம் மக்­களின் வாக்­கு­களைப் சிதரடிக்கும் குறுகிய நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த செயற்பாடு வரவேற்கத்தக்கதல்ல. எனினும் இன்றளவில் முஸ்லிம் மக்கள் ஒவ்வொருவர் தொடர்பிலும் நன்கு அறிந்திருக்கிறார்கள். ஆகவே ஹிஸ்புல்லாஹ்வுக்கு பெருமளவில் வாக்களிக்கமாட்டார்கள்.