இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை புனேயில் ஆரம்பமாகியுள்ளது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியானது இந்திய கிரிக்கெட் அணியுடன் 3 இருபதுக்கு -20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் இருபதுக்கு - 20 தொடர் ஏற்கனவே சமனிலையில் முடிய, இவ்விரு அணிகளுக்கிடையேயான முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

ரோகித் சர்மா இரண்டு இன்னிங்ஸிலும் சதம் அடித்தார். மயங்க் அகர்வால் இரட்டை சதம் விளாசினார். 

இந் நிலையில் 2 ஆவது டெஸ்ட் போட்டி புனேவில் இன்று நடக்கிறது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி, துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார். 

இந்திய அணியில் ஹனுமா விஹாரி நீக்கப்பட்டு, வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். தென்னாபிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சாளர் பீடிட்டுக்கு பதிலாக அன்ரிச் நார்ஜே சேர்க்கப்பட்டுள்ளார்.

முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணியானது சற்றுமுன்னர் வரை ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் ஒரு விக்கெட்டினை இழந்து 36 ஓட்டங்களை குவித்துள்ளது.

ரோசித் சர்மா 14 ஓட்டத்துடன் ஆட்டமிழந்ததுடன் மயங்க் அகர்வால் 13 ஓட்டத்துடனும் புஜாரா ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.