கொத்­மலை கல்வி வல­யத்­திற்­குட்­பட்ட பெருந்­தோட்டப் பாட­சா­லை­யொன்றில் ஏழு மாண­வர்கள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­திற்கு உள்­ளாக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

மேற்­படி பாட­சா­லையில் எட்டாம் வகுப்பில் பயிலும் இருவர், 9ஆம் வகுப்பில் பயிலும் இருவர், 10ஆம் வகுப்பில் பயிலும் மூவர் என ஏழு பேர் பல­முறை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாக்­கப்­பட்­ட­தாக முறைப்­பாடு பதி­வா­கி­யுள்­ளது. கொத்­மலை பொலிஸ் நிலை­யத்­திற்குக் கிடைத்த முறைப்­பாட்டை அடுத்து குறித்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­தாகக் கரு­தப்­படும் பாட­சாலை அதிபர் கைது செய்­யப்­பட்டார். கைது செய்­யப்­பட்ட அதிபர் நாவ­லப்­பிட்டி நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்ட நிலையில் அன்று கட­மையில் இருந்த பதில் நீதவான் எஸ். மங்­ச­வ­ல­கெ­தர சந்­தேக நபரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­விட்டார்.

மேற்­படி பாட­சா­லையின் அதிபர் நீண்­ட ­கா­ல­மாக மாண­வர்­களை துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாக்கி வந்­துள்­ளது தெரி­ய­வந்­துள்­ளது. இச்­சம்­பவம் வெளிவ­ராத வகையில் இர­க­சி­ய­மாக இருந்து வந்­துள்­ளது.

இந்­நி­லையில் குறித்த அதி­ப­ரால் பல­ த­ட­வைகள் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளாக்­கப்­பட்ட மாணவி தனது நண்­பி­யிடம் விட­யத்தை தெரி­வித்­த­தை­ய­டுத்து குறித்த நண்பி பாட­சாலை ஆசி­ரி­ய­ரிடம் இதனைத் தெரி­வித்­துள்ளார்.

குறித்த ஆசி­ரியை இத்­த­க­வலை பெற்­றோ­ருக்குத் தெரி­வித்­துள்ளார். இத­னை­ய­டுத்து பெற்­றோ­ரினால் கொத்­மலை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. மேற்படி முறைப் பாட்டையடுத்து குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மத்திய மாகாண ஆளுனரை சந்தித்து கவனம் செலுத்துமாறுகேட்டுக்கொண்டார். விடயத்தை செவிமடுத்த ஆளுனர் கீர்த்தி தென்னகோன் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஆறுமுகன் தொண்டமானிடம் உறுதியளித்துள்ளார்.