(இரா.செல்­வ­ராஜா)

ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பா­ளரின் தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தை தயா­ரிப்­பது தொடர்­பாக பங்­காளி கட்­சி­க­ளுடன் பேச்சு வார்த்தை நடத்­தப்­பட இருப்­ப­தா­கவும் இது தொடர்­பான பேச்­சு­வார்த்­தைகள் அடுத்த வாரம் இடம்­பெறும் என்றும் ஐக்­கிய தேசிய கட்­சியின் முன்னாள் பொதுச் செய­லாளர் திஸ்ஸ அத்­த­நா­யக்க தெரி­வித்தார்.  

குறித்த தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் வடக்கு– கிழக்கு மக்­களின் காணி பிரச்­சி­னைக்கு முடி­வு­கா­ணுதல், தோட்ட தொழி­லா­ளர்­களின் நலன் சார்ந்த விட­யங்கள்,  வேலை­யில்லாப் பிரச்­சி­னையை தீர்க்கும் வழி­வ­கைகள், இளை­ஞர்­களின் பிரச்­சி­னைக்கு முன்­னு­ரிமை வழங்கல் உள்­ள­டங்­க­ளாக பல முக்­கிய அம்­சங்கள் சேர்த்துக் கொள்­ளப்­படவிருப்­ப­தாக அவர் மேலும் தெரி­வித்தார்.

இதே­வேளை ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்­கான தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பது தொடர்பாக கூட்டு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது.