(நா.தனுஜா)

ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­ச வுக்கு தமது ஆத­ர­வையும், ஆசி­யையும் வழங்கும் நோக்கில் நாட்டின் அனைத்து பௌத்த தேரர்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி மகா­நா­யக்க தேரர்­களை ஒன்­றி­ணைத்து நாளைய தினம் மஹ­ர­க­மவில் மகா­சங்க சம்­மே­ள­ன­மொன்றை ஏற்­பாடு செய்­தி­ருப்­ப­தாக ஐக்­கிய தேசிய பிக்கு முன்­னணி தெரி­வித்­தி­ருக்­கி­றது.

கொழும்­பி­லுள்ள ஐக்­கிய தேசியக் கட்­சி யின் அலு­வ­ல­கத்தில் நேற்று புதன்­கி­ழமை ஐக்­கிய தேசிய பிக்கு முன்­ன­ணியால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பில் அதன் தலைவர் தீனி­யா­ஹெல பாலித தேரர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

 அவர் அங்கு மேலும் கூறி­ய­தா­வது,

இந்­நாட்­டி­லுள்ள அனைத்து பௌத்த தேரர்­க­ளையும் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி 3 பௌத்த சங்­கங்­க­ளி­னதும் மகா­நா­யக்க தேரர் கள் ஒன்­றி­ணைந்து நாளை வெள்­ளிக்­கி­ழமை பிற்­பகல் 2 மணிக்கு மஹ­ர­கம இளைஞர் சேவை மத்­திய நிலை­யத்தில் பௌத்­த­சங்க சம்­மே­ள­ன­மொன்றை ஏற்­பாடு செய்­தி­ருக்­கின்றோம். ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தா­சவு க்கு ஆசி­ வ­ழங்­கு­வதும், அவ­ரு­டைய வெற்­ றிக்­கான ஆத­ரவை வெளிப்­ப­டுத்­து­வதுமே இந்த சம்­மே­ளனத்தை ஏற்­பாடு செய்­வ­தற் ­கான நோக்­க­மாகும்.

தற்­போ­தைய அர­சாங்­கத்­தி­னூ­டாக பௌத்த மதத்­திற்கு பெரு­ம­ள­வான சேவை­யாற்­றப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக சஜித் பிரே­ம­தாச பௌத்த விகா­ரை­க­ளுக்கும், ஆரா­மை­க­ளுக் கும், சைத்­திய நிர்­மா­ணங்­க­ளுக்கும் பல்­வேறு வகை­யிலும் உத­வி­களை வழங்­கி­யி­ருக்­கிறார். சஜித் பிரே­ம­தாச திற­மை­யா­னதும், துடிப்­பா­ன­து­மான ஒரு தலை­வ­ராவார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் டீ.எஸ்.சேனா­நா­யக்க, பிரே­ம­தாச, ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­ளிட்ட தலை­வர்­க­ளாலும் பௌத்த மதத்­துக்கு பல்­வேறு சேவைகள் ஆற்­றப்­பட்டு வந்­தி­ருக்­கின்­ற­மையை நினைவுபடுத்த வேண் டும்.

அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சி ஒரு போதும் நாட்டைப் பிளவுபடுத்தாது என் பதுடன், பௌத்த மதத்துக்குக் காணப்படும் முதன்மையான இடத்தை இல்லாமல் செய் யாது. அதனை அனைவரும் நன்கு விளங் கிக்கொள்ள வேண்டும்.