ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகள் பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க அச்சுத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

35 வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலின் வாக்குச்சீட்டு 26 அங்குல நீளமானதென திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு ஒருகோடியே 60 இலட்சம் வாக்குச்சீட்டுக்கள் எதிர்வரும் தினங்களுக்குள் அச்சிடப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு நடைபெறவிருக்கும் எல்பிட்டிய தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் விநியோகப்படுத்தும் நடவடிக்கைகளும் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.