ஜேர்மனியில் யூதவழிபாட்டு தலமொன்றிற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜேர்மனியின் கிழக்கு பகுதியில் உள்ள ஹலே நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பல துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன,சந்தேகநபர்கள் வாகனத்தில் தப்பியோடியவண்ணமுள்ளனர் மக்களை வீடுகளிற்குள் இருக்குமாறு கேட்டுள்ளோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உடனடியாக காவல்துறையினரை அங்கு அனுப்பியுள்ளோம்,இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் குற்றவாளிகள் தப்பியோடுகின்றனர் வீடுகளிற்குள் இருங்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இராணுவசீருடை அணிந்தவர்களே துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் பெண்ணொருவர் உட்பட இருவர் பலியாகியுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகின்றன.

யூதர்களின் கல்லறையின் மீது கைக்குண்டு தாக்குதலும் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.