மெக்சிக்கோவில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மேயரை வாகனத்தில் கட்டி வீதியால் இழுத்துச்சென்ற 11 பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மெக்சிக்கோவின் தென்பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தேர்தல் காலத்தில் கிராமத்தின் வீதிகளை திருத்தி தருவதாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை தொடர்ந்தே பொதுமக்கள் அவரை  டிரக்கில் கட்டி பழுதடைந்த வீதி வழியாக இழுத்துச்சென்றுள்ளனர்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மேயர் இரண்டாவது தடவையாக தாக்கப்பட்டுள்ளார்.

மேயரை அவரது அலுவலகத்திலிருந்து  சிலர் வெளியே இழுத்து வருவதையும் வாகனத்தின் பின்பகுதியில் ஏற்றுவதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

அதன் பி;ன்னர் அவரை வாகனத்தின் பின்னால் கட்டி இழுத்து செல்வதை சிசிடிவி கமராக்கள் காண்பித்துள்ளன.

இதன் பின்னர் நகரசபை ஊழியர்கள் அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி மேயரை காப்பாற்றியுள்ளனர்.