விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் - இலங்கைக்கிடையிலான போட்டி

Published By: Vishnu

09 Oct, 2019 | 04:30 PM
image

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டியானது இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த நிகழ்வுகளும் இதன்போது ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி இப் போட்டி இடம்பெறும் லாகூரிலுள்ள காடபி கிரிக்கெட் மைதானமானது இளஞ்சிவப்பு நிறத்தினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் போட்டி ஆரம்பமாகுவதற்கு முன்னர் மார்பக புற்றுநோய் தொடர்பான  நிகழ்வொன்றும் இடம்பெறவுள்ளது. 

இதில் பாகிஸ்தான் நாட்டு ஜனாதிபதி டாக்டர் ஆரிப் அல்வி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தின் தலைவர் எஹ்சன் மணி ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

மேலும் இப் போட்டியில் கலந்துகொள்ளும் இரு அணி வீரர்களும் கையில் இளம்சிவப்பு நிறத்திலான பட்டிகளை கட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளையாடவுள்ளனர். 

இதேவேளை பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகமானது போட்டியைக் காணவரும் ரசிகர்களை இளஞ்சிவப்பு நிற உடை அணியுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20