அழிந்து வரும் பனை வளத்தைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தினால் 50 ஆயிரம் பனை விதைகள் நடும் செயற் திட்டம் இன்று புதன் கிழமை காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த செயற் திட்டத்தை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் இன்று புதன் கிழமை காலை 10 மணியளவில் கள்ளியடி கிராம சேவையாளர் பிரிவில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது முதற்கட்டமாக 16 ஆயிரம் பனை விதைகள் நடுகை செய்யப்பட்டது.

குறித்த நிகழ்வில் கள்ளியடி கிராம மக்கள் , பாடசாலை மாணவர்கள் , மாந்தை மேற்கு பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு பனை விதைகளை நாட்டி வைத்தனர்.