வியாழனை முந்தியது சனி ! சனியைச் சுற்றும் அதிக சந்திரன்கள்

Published By: Digital Desk 3

09 Oct, 2019 | 03:30 PM
image

சனிக் கிரகத்தைச் சுற்றிவரும் 20 சந்திரன்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதையடுத்து சனிக்கிரகத்தை சுற்றும் சந்திரன்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவின் கார்னிகி விஞ்ஞான ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள் சுபாரு தொலைநோக்கி (Subaru Telescope) மூலம் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் சனி கிரகத்தை சுற்றிவரும் 20 புதிய துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ‌இந்த புதிய துணைக்கோள்கள் 5 கிலோ மீற்றர் தொலைவில் இருந்து சனிக் கிரகத்தச் சுற்றி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவற்றில் 17 துணைக்கோள்கள் சனிக் கிரகம் சுற்றும் பாதைக்கு எதிரான பாதையில் சனி கிரகத்தை சுற்றி வருகின்றன. மீதமுள்ள மூன்று துணைக் கோள்கள் சனி கிரகம் சுற்றும் பாதையில் சனி கிரகத்தை சுற்றி வருகின்றன.

சனி கிரகத்திற்கு எதிரான பாதையில் சுற்றும் துணைக் கோள்கள் ஒரு முறை சனி கிரகத்தை சுற்றி வர 3 வருடம் காலத்தை எடுத்து கொள்கிறது. அதேபோல சனி கிரக பாதையில் சுற்றும் துணைக் கோள்களில் இரண்டு துணைக் கோள்கள் சனி கிரகத்தை சுற்றி வர 2 வருட காலம் எடுத்து கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் புதி‌ய துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதன் மூலம் அதிக சந்திரன்களை கொண்ட கிரகத்தில் சனி முன்னிலை பெற்றுள்ளது.

தற்போது சனி கிரகத்தை 82 நிலவுகள் சுற்றி வருவதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  இதற்கு முன்பு வி‌யாழன் கிரகம் 79 சந்திரன்களுடன் முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33