இந்தியாவின் உத்தரபிரதேசம்  பிலிபிட் நகரில் உள்ள  பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியொருவர் குரங்கு ஒன்றை தன்னுடன் வைத்து அவ்வப்போது தலைமுடியை சுத்தம் செய்து கொள்வதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அண்மையில் அவர் அலுவலகத்தில் வழக்கு ஒன்றின் ஆவணங்களை சரிபார்த்துக்கொண்டிருந்தபோது, அவரது தோள்பட்டையில் அமர்ந்தபடி குரங்கு ஒன்று அவருக்கு தலைமுடியை சுத்தம் செய்து கொண்டிருந்தது.

தலையில் பேன் பார்ப்பது போல் இருந்த இந்த காட்சி, தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குரங்கு தன் மீது அமர்ந்திருந்தும், அதனை பொருட்படுத்தாது பொலிஸ் அதிகாரி இயல்பாக தனது பணியில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தார்.