தளபதி விஜய் நடிப்பில் தயாராகியிருக்கும் ‘பிகில்’ படத்தின் விளம்பரத்தை பிரம்மாண்டமாக தொடங்கியிருக்கிறது பட தயாரிப்பு நிறுவனம்.

தளபதி விஜய் நடித்த நடித்திருக்கும் ‘பிகில்’ படம் தீபாவளியன்று திரைக்கு வருகிறது. இப்படத்தின் முன்னோட்டம் ஒக்டோபர் 12ஆம் திகதியன்று மாலை 6 மணி அளவில் வெளியாகிறது.

பிகில் படத்திற்கு போதிய அளவிற்கு விளம்பரப்படுத்தவில்லை என்று விஜய் ரசிகர்கள் பட தயாரிப்பு நிறுவனத்தின் மீது வருத்தத்தில் இருந்தார்கள். ஆனால் அந்த வருத்தத்தைப் போக்கும் வகையில் பிகில் படத்தின் விளம்பரத்தை தயாரிப்பு நிறுவனம் பிரம்மாண்டமாக தொடங்கியிருக்கிறது.

பிகில் படம் உதைபந்தாட்ட மையப்படுத்தி இருப்பதால் சென்னை வேளச்சேரியில் உள்ள பிரம்மாண்டமான அரங்கத்தில் 64 அணிகள் பங்குபெறும் உதைபந்தாட்டப் போட்டியினை ஒக்டோபர் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில்  காலை பத்து மணி முதல் நான்கு மணி வரையில் நடத்த திட்டமிட்டிருக்கிறது. 

இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருப்பதால், விஜய் ரசிகர்களும், உதைபந்தாட்ட ரசிகர்களும் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். உதைப்பந்தாட்டத்தில் வெற்றிப் பெறும் அணிக்கு தளபதி விஜய், இயக்குநர் அட்லீ உள்ளிட்ட படக்குழுவினர் பரிசளிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

அத்துடன் முதன் முதலாக தளபதி விஜய் உடன் நயன்தாரா இருக்கும் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு, நயன்தாராவின் ரசிகர்களையும் படத்தயாரிப்பு நிறுவனம் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.