கடந்த சனிக்கிழமை தாய்லாந்தின் வடக்கு,கிழக்கு பகுதியில் உள்ள அருவி ஒன்றில் விழுந்து ஆறு யானைகள் உயிரிழந்த அதே இடத்தில் மேலும் 5 யானைகள் விழுந்து உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் 'காவோ யா' தேசிய பூங்கா அமைந்துள்ளது. 

இந்த வனச் சரணாலயத்தை தாய்லாந்து வனத்துறை மற்றும் வனவிலங்கு காப்பகம் பராமரித்து வருகிறது.

இந்த வனத்துக்குள் 'ஹாய் நரோக்' நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

இந்நிலையில்  கடந்த சனிக்கிழமை யானைகள் கூட்டம் அருவியின் பள்ளத்தில் விழுந்து உதவிக்காக பிளிறியபடி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் நீண்ட போராட்டத்துக்குப்பின், பாறைகளுக்கு இடையே சிக்கி இருந்த இரு யானைகளை மீட்டபோது அதில் 6 யானைகள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டன.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாணைகள் இடம்பெற்ற நிலையில் அந்ந அருவியின் உச்சியில் இருந்து மேலும் கீழே விழுந்தது 5 யானைகள் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இதுவே ஒரு சம்பவத்தில் அதிக யானைகள் பலியானதாக பதிவாகியுள்ளது.

இவ்வாறு 11 யானைகளும் சுமார் 656 அடி உயரமான நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதேவேளை ஆசியாவில் 7 ஆயிரம் யானைகள் உள்ள நிலையில் அதில் அரைவாசிக்கும் மேலான யானைகள் தாய்லாந்தில் உயிர் வாழ்ந்து வருகின்றது.

இந்நிலையில் குறித்த பூங்காவில் 300 யானைகள் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகளுக்கு : https://www.virakesari.lk/article/66355