கடந்த வாரம் இடம்பெற்ற  விருதுவழங்கும் நிகழ்வொன்றின் போது பென்ஸ்டோக்ஸ் தனது மனைவியுடன் கைகலப்பில் ஈடுபட்டார் என இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பென்ஸ்டோக்சின் கை ஒரு கட்டத்தில் தனது மனைவியின் கழுத்து வரை சென்றது என  இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தகவல் வெளியாகி ஒரு சில மணிநேரங்களில் பென்ஸ்டோக்சின் மனைவி இதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளார்.

இவ்வாறான அர்த்தமற்ற விடயங்கள் குறித்தெல்லாம் இவர்கள் பேசுவார்களா என்பது நம்பமுடியாத விடயமாக உள்ளது என பென்ஸ்டோக்சின் மனைவி தெரிவித்துள்ளார்.

நாங்கள் இப்படித்தான் எங்கள் அன்பை வெளிப்படுத்துவதற்கு முகத்தை இழுத்து செல்லமாக விளையாடுவோம் என பென்ஸ்டோக்சின் மனைவி தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

ஆனால் சிலர் இதனை வேறு விதமாக சித்தரிக்க முயல்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பென்ஸ்டோக்ஸ் தனது மனைவியின் டுவிட்டை மறுபதிவுசெய்துள்ளார்.

இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையின் தலைவர் இது குறித்து சம்பந்தப்பட்ட அனைவருடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.