(செ.தேன்மொழி)

நாட்டின் மதுபானம் சார்ந்த கொள்கைகளை நிதி அமைச்சு தனது விருப்பத்திற்கு மாற்றி அமைப்பதானது ஜனநாயகத்திற்கு புறம்பானது என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிகாலத்தில் மதுசாரம் தொடர்பான கொள்கைகள் பலவாறு மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. 

இதனால் நாட்டில் மதுசார பாவனை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகவும் அதனால் இந்த விடயம் தொடர்பில் அனைவரும் சிந்தித்து செயற்பட வேண்டும்.

இவ்வாறான நடவடிக்கைகளின் காரணமாக மதுசார விற்பனையால் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.