நந்திக்கடலில் மீன்பிடிக்கு தடையாக இருந்த இராணுவ பாதுகாப்பு வேலிகள் பின்னகர்த்தப்பட்டுள்ளது

Published By: Daya

09 Oct, 2019 | 11:53 AM
image

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளை அடுத்து நந்திக்கடல் கரையோரமாக இருந்த பாதுகாப்பு வேலிகள் பின்னகர்த்தப்பட்டு மீனவர்கள்  தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதி மேற்கொள்ளபட்டுள்ளது.

முல்லைத்தீவு நந்திக்கடல் சிற்றளவு மீனவர் சங்கத்தினால் கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் - வவுனியா பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்திருந்தனர். அதில் மீன்பிடி தேவைகளின் பொருட்டு நந்திக்கடல் இருமருங்கிலும் தமது  பாவனையிலிருந்த வீதிகள் யுத்தம் நிறைவடைந்த பின் பாதுகாப்பு தரப்பினரால் மூடப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மீன்பிடி நடவடிக்கைகளில் பல தடைகளை பாதுகாப்பு தரப்பினர் விதித்ததாகவும் குறிப்பாக நந்திக்கடலின் வடக்குப் பகுதியில் தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல் கரையில் தொழிலை கடற்படை மேற்கொள்ள அனுமதிக்காமை, முகத்துவாரம் பகுதியிற்கு செல்வதற்கு பாதை விடாமை, வாழ்வாதார பாதிப்பு போன்றவை தொடர்பில் ஆணைக்குழுவிற்கு முறையிட்டிருந்தனர்,

சங்கப் பிரதிநிதிகளின் முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட ஆணைக்குழு, கடந்த செப்டெம்பர் மாதம் கோத்தாபய கடற்படை முகாமின் பொறுப்பதிகாரியினையும் அடுத்தகரையில் அமைந்திருக்கும் இராணுவ முகாமின் பொறுப்பதிகாரியினையும் முறைப்பாட்டாளரையும் விசாரணைக்கு அழைத்து சிற்றளவு மீன்பிடியில் ஈடுபடும் தரப்பினது பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக்கூறியதுடன் மீனவர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் தொடர்பிலும் எடுத்துக்கூறப்பட்டது.

ஆணைக்குழுவினால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் தொடர்பில் கரிசனை கொள்வதாக தெரிவித்த படையினர் நந்திக்கடல் மீனவர்களின் மீன்பிடி நடவடிக்கையின் பொருட்டு பல விடயங்களை தாம் மேற்கொள்வதாக ஆணைக்குழுவிற்கு உறுதியளித்திருந்தனர். 

இதனையடுத்து நந்திக்கடலின் ஒரு பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் சிறுகடல் வரை இட்டிருந்த முட்கம்பி பாதுகாப்பு வேலிகளை பின்னகர்த்தியுள்ளனர். இதன் மூலம் மீனவர்கள் கரையோரமாக தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் மறுபுறத்தில் இருக்கும் கடற்படையினர் 04 கால அவகாசத்தை கோரியுள்ளதுடன் தாம் கரையோரமாக பாதுகாப்பு வேலிகளை இட்டதன் பின்பு கரையோரமாக தரித்து தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் உறுதியளித்துள்ளதுடன் நந்திக்கடலின் கடலோரமாக அமைந்துள்ள பகுதியில் சுத்தமான முறையில் தொழில் செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றி நேரடியாக ஆராயுமுகமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பொறுப்பதிகாரி எம்.ஆர்.பிரியதர்சனவும் , சட்டத்தரணியும் விசாரணை அதிகாரியுமான ஆர்.எல்.வசந்தராஜாவும் நேரடியாக அப்பகுதிக்கு நேற்று சென்று அவதானிப்புக்களை மேற்கொண்டுள்ளனர். 

இந்நிலையில், முன்னேற்றங்கள் மற்றும் தீர்க்கப்பட வேண்டியிருக்கும் பிரச்சினைகள் பற்றி மீனவ பிரதிநிதிகள் மற்றும் இராணுவத்தின் 591 பிரிகேட் பிரிகேடியர் வணசிங்கவுடனும் நீண்ட கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் இன்னும் பல முன்னேற்றங்கள் ஏற்படும் என ஆணைக்குழுவின்  அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34