இந்திய டெனிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் தங்கை அனாம் மிர்சா இந்திய அணியின் முன்னாள் தலைவர் முகமட் அசாருதீனின் மகனை  மணமுடிக்கவுள்ளார்.

சானியா மிர்சா இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.

தனது சகோதரி அனாம் மிர்சா அசாருதீனின் மகன் அசாட்டினை மணமுடிக்கவுள்ளார் இந்த திருமணம் டிசம்பரில் இடம்பெறவுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது சகோதரி அழகான இளைஞனை மணம்முடிக்கின்றார் அந்த இளைஞனின் பெயர் அசாத்  அவர் இந்திய அணியின் முன்னாள் தலைவர் அசாருதீனின் மகன் நாங்கள் இது குறித்து பெரும் உற்சாகத்தில் உள்ளோம் என சானியா மிர்சா தெரிவித்துள்ளார்.

சில நாட்களிற்கு முன்னரே திருமணத்திற்கு முந்திய  வெளிநாட்டு பயணத்தினை முடித்துகொண்டு எனது தங்கை திரும்பியுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனாம் அசாத்தும் திருமணத்திற்கு முன்னரே சமூக ஊடகங்களில் தாங்கள்  ஒன்றாக காணப்படும் படங்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.