முதுகு வலியால்  80 சதவீத மக்கள் அவதிப்படுகிறார்கள். சிலர் மட்டுமே இதற்கான முறையான சிகிச்சைகள் மூலம் நிவாரணத்தை பெறுகிறார்கள். பலர் சாதாரண வலி நிவாரணிகளை எடுத்துக்கொண்டு தற்காலிகமாக வலியிலிருந்து நிவாரணம் பெறுகிறார்கள். ஆனால் முதுகுவலியை குணப்படுத்த தற்பொழுது ஓஸ்டியோபதி எனும் சிகிச்சை முறை அறிமுகமாகியிருக்கிறது.

ஓஸ்டியோபதி சிகிச்சையில் மருந்துகள் இல்லை. சத்திர சிகிச்சைகள் இல்லை. வைத்தியர்கள் தங்களது கைகளையே கருவியாக பயன்படுத்தி, முதுகுவலிக்கு நிவாரணம் தருகிறார்கள். இத்தகைய சிகிச்சைகள் மூலம் முதுகு வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, முழங்கை வலி, தலைவலி, பாதம், கணுக்கால், இடுப்பு, கால், மூட்டு வலி உள்ளிட்ட ஏராளமான வலிகளை இத்தகைய சிகிச்சைகளின் மூலம் குணப்படுத்த முடியும்.

இவர்கள் மூளையின் கட்டளையை ஏற்று செயல்படும் நரம்புகளின் பகுதிகளை துல்லியமாக உணர்ந்து, அவ்விடத்தினை தொடுவதன் மூலமும், மெதுவாக அழுத்துவதன் மூலமும், சீராக மசாஜ் செய்வதன் மூலமும் சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். இவர்கள் வலிக்கான மூல காரணத்தை கண்டறிய நோயாளிகளிடம், 2 மணித்தியாலம் வரை முதற்கட்ட பரிசோதனையை மேற்கொள்கிறார்கள். 

பாதிப்பை உண்டாக்கக் கூடிய காரணிகளை கண்டுபிடித்தவுடன், அதற்குரிய சிகிச்சைகளை செய்து, வலியினை குறைக்கிறார்கள் அல்லது பாதிப்பினை நீக்குகிறார்கள்.