இலங்கையில் நிலவி வரும் வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவுள்ளதாக அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் ஜீலி பிஷப் தெரிவித்துள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்குமிடையே மிக நெருங்கிய தோழமை உள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளது. பலர் வீடுகளை இழந்துள்ளனர் மீண்டும் அவர்கள் குடியேறுவதற்கான தேவையான சகல உதவிகளையும் செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார்.