ஸ்ரீலங்கா  சுதந்திரக்கட்சியின் பதில் தவிசாளராக பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு அடுத்தகட்ட  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசியல் செயற்பாடுகளுக்கு 15பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்ட்டுள்ளது.

எனினும் ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை இப் பதவியை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்சொயலாளர்  தாயசிறி ஜெயசேகர  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.