புத்தளம் , காலி ஊடக மாத்தறை வரையான கடற்பிராந்நியங்களில் சற்று கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவர்களை அவதானமாக செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

காற்றின் வேகம் மற்றும் மழையின் காரணமாக குறித்த கடற்பிராந்தியங்களில் மீன் பிடிக்கச் செல்வதை தவிர்க்குமாறும் , காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்ககூடுமென திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.