ஜனாதிபதி வேட்பாளரின் கல்வி தகைமைகள் குறித்து ரவி கருணாநாயக்க ஐ.தே.கவின் வேட்பாளர் தெரிவு இடம்பெற்ற காலத்தில் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

 

தற்போது சஜித்தின் கல்வி தகமைகளை மக்கள் அல்லது ஊடகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரனவீர தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன தலைமை காரியாலயத்தில்  இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில்  கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

ஜனாதிபதி வேட்பாளரின் கல்வி தகமை பற்றி  ரவி கருணாநாயக்க கருத்துக்களை முன்வைத்திருந்தார். ஆனால் தற்போது சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேற்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் கல்வி தகைமைகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன இதனை நாடு மக்களுக்கோ அல்லது ஊடகங்களுக்கோ முன்னிலை படுத்த வேண்டும்.

நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் என்பவற்றை பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷ நிரூபித்து உள்ளார்.

 நாட்டு மக்களுக்கு பொய் வாக்குறுதிகள் வழங்குவதை விடுத்து உண்மையை மக்கள் முன் சமர்ப்பியுங்கள். ஒவ்வொரு பதவிக்கும் கல்வி தகைமைகள் காணப்படுகின்றன ஜனாதிபதி வேட்பாளர் என்ற வகையில் சஜித் பிரேமதாச நாட்டு மக்களுக்கு தன்னுடைய கல்வி தகைமைகளை முன்னனிலைப்படுத்த வேண்டும் என்றும் இதன் போது குறிப்பிட்டார்.