(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

நீராவியடி பிள்ளையார் ஆலய விடயத்தில் தமிழர் தரப்பே குழப்பங்களை ஏற்படுத்தி ஒட்டுமொத்த சிங்கள பெளத்த மக்களையும் வேதனைப்படுத்தியுள்ளதாக பொது எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கம சபையில் தெரிவித்தார். 

நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று பாராளுமன்றத்திற்கு கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையின் போது உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த நாடு சிங்கள பெளத்த நாடு. இங்கு தேரர்களின் தலைமைகளுக்கு இடமளிக்க வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் இன்று பிரச்சினைகள் இல்லை. இந்த நிலம் பிரச்சினையை தேரர்களிடம் விட்டிருந்தால் இந்த பிரச்சினை இவ்வளவு தூரம் வந்திருக்காது. இந்த பிரச்சினை வளர தமிழ் தரப்பே காரணம். நீங்கள் பேசாமல் இருந்திருந்தால் ஒரு பிரச்சினை வந்திருக்காது. நீங்கள் செய்த செயலால்  தெற்கில் மக்கள் மத்தியில் பாரிய அழுத்தம் ஏற்பட்டுள்ளது. அந்த தேரர் இறந்தால் அங்கு இறுதிக் கிரியைகள் செய்ய வேண்டும். 

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு மிகவும் மோசமாக நடந்துகொண்டுள்ளது. இங்கு கொழும்பில் சிங்கள மக்களுடன் வாழ்ந்துகொண்டு செயற்படுவது இவ்வாறு குழப்பங்களை ஏற்படுத்துவது தவறானது என்றார்.