ஜீ வி பிரகாஷ் நடிப்பில், இயக்குநர் எழில் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

இசை அமைப்பாளராகவும், இளம் நடிகராகவும் ஒரே நேரத்தில் இரட்டை குதிரையில் வெற்றிகரமாக சவாரி செய்யும் கலைஞராக வலம் வருகிறார் ஜீ. வி. பிரகாஷ் குமார் . இவரது நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஆயிரம் ஜென்மங்கள்’. 

இப்படத்தில் ஜீ. வி பிரகாஷ் குமாருடன் பிக்பொஸ் சீஸன்=3 புகழ் சாக்ஷி அகர்வால், நிகிஷா பட்டேல்,  ஈஷா ரெப்பா, வெண்பா, நடிகர்கள் சதீஷ், சாம்ஸ், சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யு கே செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த , சி சத்யா இசையமைத்து இருக்கிறார். கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை கவனிக்க, திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குநர் எழில்.

‘டார்லிங்’ படத்திற்கு பிறகு ஜீ. வி பிரகாஷ்குமார் நடித்திருக்கும் ஹொரர் திரைப்படம் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்பதும்,  இந்த படம் தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பதும்,  இதே பெயரில் 1976 ஆம் ஆண்டில் இயக்குநர் துரையின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ஒரு படம் வெளியாகியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.