இலங்கையில் முதன் முறையாக இந்தியாவின் விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் கலந்து சிறப்பிக்கும் இசை நிகழ்ச்சி எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது. 

சமூக நலத்திட்ட சேவை நிதிக்காக கொழும்பு கோல்ட் சிற்றி லயன்ஸ் கழகம் பிரிவு 306 பி 1 இன் ஏற்பாட்டில் லிட்டில் ஏசியாவின் அனுசரணையில் இந்த இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சியானது கொழும்பு முகத்துவாரம் விஷ்ணு கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள இலங்கை முக்குலத்தோர் கலாச்சார மண்டபத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதில் கலந்துகொள்வதற்காக இந்தியாவின் விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் - ராஜலக்கஷமி மற்றும் பிரபல பின்னணி பாடகி சூப்பர் சிங்கர் ரோஷனி  ஆகியோர் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு 0777413374 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு ஆசனங்களை பதிவு செய்துகொள்ள முடியும்.