ஹட்டன் நோர்வூட் பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா பகுதிக்கு அருகில் உள்ள பலநூறு ஆண்டுகள் பலமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயத்திற்கு அருகில் உள்ள பைனஸ் மர காட்டுப் பகுதியில் சுற்று சூழலை மாசடையும் வகையில் பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல்கள் குப்பைகள் பாரிய அளவில் கொட்டப்பட்டுள்ளது.

குறித்த  இடம் அட்டன் நகரசபைக்கு உரித்தானது இதனை எவரும் கண்டு கொள்ளாததால் அவ்விடத்தில் துர்நாற்றம் வீசுவதால் அவ்வீதியூடாக செல்வோர் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளவதாகவும் பஸ்களில் செல்வோரும் மற்றும் வாகனங்களில் செல்வோரும் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் டிக்கோயா சிங்கள பாடசாலை அருகிலும் குப்பைகள் கொட்டப்படுவதால் அங்கும் பாடசாலை மாணவர்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதுடன் சுகாதார சீர்கேட்டை எதிர் நோக்குகின்றனர்.