கொழும்பிலுள்ள குப்பைகளை கொட்டுவதற்காக புத்தளம் அருவாக்காட்டில் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தையடுத்து மக்கள் மத்தியில் அச்சநிலையேற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த வெடிப்புச் சம்பவம் நேற்றிரவு 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பாரிய வெடிப்புச் சத்தத்தையடுத்து அப்பகுதியில் தீச் சுவாலை ஏற்பட்டதாகவும் இதன்போது நிலங்கள் வீடுகள் அதிர்வடைந்ததாகவும் அப்பகுதியில் வாழும் மக்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக வெடிப்புச் சம்பவத்தையடுத்து அருவாக்காட்டை அண்டிய சேரக்குளி, கரைத்தீவு, கங்கைவாடி, எலுவாங்குளம் பிரதேசங்களில் வாழும் மக்கள் அதிர்வை உணர்ந்ததாக தெரிவிக்கின்றனர்.
இதனால் நேற்று இரவு 9.15 மணியளவில் இருந்து சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.
இதையடுத்து தாம் அச்சத்தில் உறங்கவில்லையென மக்கள் தெரிவித்தனர். பாரிய சத்தம் ஏற்பட்டதன் அச்சத்தின் காரணமாக வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையத்தில் அப்பகுதி மக்கள் முறைப்பாடுகளை தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கொழும்பிலிருந்து புத்தளம் அருவக்காட்டிற்கு குப்பைகளை ஏற்றிக் கொண்டு வருகைத் தந்து கொண்டிருந்த டிப்பர் வாகனங்கள் சம்பவத்தையடுத்து கட்டுநாயக்க பகுதியில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டதாக வண்ணாத்திவில்லு பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM