(எம்.ஆர்.எம்.வஸீம்)

கோத்­தபாய ராஜபக் ஷ  ஜனா­தி­ப­தி­யா­னதும் ரணில் விக்கி­ர­ம­சிங்க பிர­த­ம­ராக இருக்­க­மாட்டார். புதிய பிர­தமர் மற்றும் அமைச்­ச­ரவை நிய­மிக்­கப்­படும் என ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார்.

சோச­லிச மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரி­விக்­கையில்,

ஜனா­தி­பதி தேர்­தலில் கோத்­தபாய ராஜபக் ஷ வெற்­றி­பெ­று­வது நிச்­ச­ய­மாகும். அவரின் வெற்­றியை தடுத்து நிறுத்­தவே தற்­போது ஐக்­கிய தேசிய கட்­சி­யினர் அவ­ருக்கு எதி­ராக நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டு­வ­ரு­கின்­றனர். அவர்கள் என்ன சதித்­திட்­டங்­களை மேற்­கொண்­டாலும் அதனை நாங்கள் வெற்­றி­கொள்வோம். அத்­துடன் வெளி­நா­டு­களில் இருந்­து­வரும் விமா­னங்கள் மூலம் கொண்­டு­வ­ரப்­படும் பொருட்கள் தொடர்பில் அர­சாங்கம் வெளிப்­ப­டுத்­தாமல் இருக்­கின்­றது. இதன் மூலம் தேர்தல் இடம்­பெ­ற­வுள்ள நிலையில் அர­சாங்கம் இறு­தி­நே­ரத்தில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் ஆத­ர­வுடன் பாரிய சதித்­திட்­டத்தை மேற்­கொள்­ளப்­போ­கின்­றதா என்ற சந்­தேகம் எமக்­கி­ருக்­கின்­றது.   ஐக்­கிய தேசிய கட்சி ஜனா­தி­பதி வேட்­பாளார் சஜித் பிரே­ம­தாச விலங்­கி­டப்­பட்டே வேட்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். குறிப்­பாக ரணில் விக்கி­ர­ம­சிங்க தொடர்ந்தும் கட்சி தலை­வ­ராக இருப்பார், ஐக்­கிய தேசிய கட்­சியின் கொள்கை தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்டும் மற்றும் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க கட்­சியின் உப­த­லை­வ­ராக இருக்­க­வேண்டும் போன்ற நிபந்­த­னைகள் அவ­ருக்கு விடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

அதனால் சஜித் பிரே­ம­தாச ஜனா­தி­ப­தி­யா­னாலும் தற்­போ­துள்ள அர­சாங்­கத்தின் கொள்­கையில் எந்த மாற்­றமும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. அர­சாங்கம் எவ்­வா­றான முயற்­சி­களை மேற்­கொண்­டாலும் கோத்­தபாய ராஜபக்ஷ தேர்­தலில் வெற்­றி­பெ­று­வது நிச்­ச­ய­மாகும். அவர் ஜனா­தி­ப­தி­யா­னதும் பிர­தமர் பத­வியில் ரணில் விக்கி­ர­ம­சிங்க இருக்­க­மாட்டார்.  கடந்த ஜனா­தி­பதி தேர்தலுக்கு பின்னர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி யானவுடன் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கினார். அத்துடன் புதிய அமைச்சரவையையும் அமைத்தார். அதேபோன்றே கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதியானதும் புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை நியமிக்கப்படுவர்  என்றார்.