இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமட் சமி தன்னிடம்  ஆலோசனை பெற்றதாக தெரிவித்துள்ள பாக்கிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சொயிப் அக்தர் ஆனால் பாக்கிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளாகள் எவரும் அவ்வாறு தன்னிடம் ஆலோசனை எதனையும் பெறாதது குறித்து ஏமாற்றம் வெளியிட்டுள்ளார்.

2019 உலக கிண்ணப்போட்டிகளில் இந்தியா அரையிறுதியுடன் வெளியேறியதை தொடர்ந்து முகமட் சமி என்னை தொடர்புகொண்டார் என அக்தர் தெரிவித்துள்ளார்.

உலக கிண்ண தொடரிலிருந்து இ;ந்தியா வெளியேறிய பின்னர் சமி என்னை தொடர்புகொண்டு இந்திய அணியின் வெற்றிக்காக பங்களிப்பு வழங்க முடியவில்லை என கவலை வெளியிட்டார் என அக்தர் தெரிவித்துள்ளார்.

நான் அவரிடம் நம்பிக்கையை இழக்கவேண்டாம உடற்தகுதியை பேணுங்கள் என தெரிவித்தேன் எனவும் அக்தர் தெரிவித்துள்ளார்.

முகமட் சமி முழுமையான வேகப்பந்து வீச்சாளராக திகழவேண்டும் என்பதே எனது விருப்பம் என அவரிடம் குறிப்பிட்டேன் எனவும் அக்தர் தெரிவித்துள்ளார்.

முகமட் சமியிடம் ரிவேர்ஸ் ஸ்விங் வீசும் திறன் உள்ளது,இது இந்திய துணைக்கண்டத்தில் பெரிய விடயம் என குறிப்பிட்டுள்ள அக்தர் நீங்கள் ரிவேர்ஸ் ஸ்விங்கில் மன்னராக மாறாலாம் எனவும் குறிப்பிட்டேன் என தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவிற்கு எதிரான முதலாவது டெஸ்டில் விசாகப்பட்டினத்தில் துடுப்பாட்டவீரர்களிற்கு சாதகமான ஆடுகளத்தில் முகமட் சமி பல விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்,இது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன் எனவும் தெரிவித்துள்ள அக்தர் எங்கள் பாக்கிஸ்தான் வீரர்கள் என்னிடம் ஆலோசனை பெறுவதில்லை ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆலோசனைகளை பெற்றுக்கொள்கின்றனர் இது என்னுடைய நாட்டை பொறுத்தவரை கவலை தரும் போக்கு எனவும் குறிப்பிட்டுள்ளார்.