தாயும் மகளும் போதைப்பொருளை கடத்தமுற்பட்டபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இருவரும் இலங்கையர் என்பதுடன் 68 வயதுடைய தாயும் 36 வயதுடைய மகளுமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் இந்தியாவின் சென்னையில் இருந்து இலங்கை வரும் போதே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட தாய் மற்றும் மகளிடமிருந்து 2.5 கிலோ கிராம் நிறையுடைய ஐஸ் ரக போதைப்பொருளை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 25 மில்லியன் ரூபாவென சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.